ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

செங்கல்பட்டு அருகே குடும்ப ஏழ்மை சூழ்நிலையால் சீமந்தம் நடத்த முடியாமல் தவித்த பெண் காவலருக்கு, சக காவலர்கள், தங்கள் சொந்த செலவில் சீமந்தம் நடத்தியுள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி பகுதியை சேர்ந்தவர் இலக்கியா. இவர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியாவின் கணவர் அரிசி ஆலை ஒன்றில் கணக்கராக பணிபுரிகிறார். 

தற்போது இலக்கியா 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக இலக்கியாவிற்கு சீமந்தம் நடத்த முடியவில்லை. இந்த செய்தி சக பெண் காவலர்கள் மூலம், காவல் ஆய்வாளர் இளங்கோவனுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார் தங்கள் சொந்த செலவில் சீமந்தம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி பெண்காவலர் இலக்கியாவுக்கு, அவருடன் பணிபுரியும் காவலர்கள், காவல் ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் தங்கள் சொந்த செலவில் சீமந்தம் நடத்தினர்.

இதனால் உணர்ச்சிவசப்பட்டு கர்ப்பிணி இலக்கியா கண்கலங்கினார்.