மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிட எல்லோருக்குமே பிடிக்கிறது. ஆனால், ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டாகுமோ என்ற அச்சத்தாலே பலரும் அதனை தவிர்க்கிறார்கள். உண்மையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மனதிற்கும் மூளைக்கும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.


ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்.. குறிப்பாக மூளையின் முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல் கார்டக்ஸ் பகுதியில் இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம்.

இந்த  மாற்றங்கள் தான் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு காரணம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதனால் சோகம் ஏற்படும்போது அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும்போது ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுங்கள். மனதில் உள்ள அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும், சந்தோஷ அலையடிக்கும். ஐஸ் க்ரீமுக்கு ஜே போடுங்கள்.