படுக்கையில் இருந்து எழுந்தவுடன் தலை சுற்றுகிறதா? எப்படி தப்புவது?

தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், திடீரென தலை சுற்றும். எதையாவது உடனே பற்றிக்கொள்ளவில்லை என்றால் கீழே விழுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சில நொடிகள் மட்டுமே இந்த பிரச்னை நீடிக்கும் என்றாலும் கீழே விழுந்துவிடலாம் என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். படுக்கையில் இருந்து எழுவதற்கு மிகவும் அச்சப்படுவார்கள்.


* ரத்தக்கொதிப்பு குறைந்தாலும் கூடினாலும் இந்த தலை சுற்றல் ஏற்படலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு திடீரென குறைந்தாலும் கூடினாலும் இந்த நிலை ஏற்படலாம்.

* இரண்டு காதுகளிலும் உள்ள 3 மிகச்சிறிய எலும்புகள்தான் மனிதர்கள் நிமிர்ந்து நிற்பதற்கும் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன. இவற்றில் குறைபாடு ஏற்படும் பட்சத்திலும் தலைசுற்றல் உண்டாகலாம்.

மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதில் சமாளித்துவிட முடியும். கண் விழித்ததும் படுக்கையில் இருந்து உடனே எழுந்துவிடாமல் நிதானமாக செயல்பட வேண்டும். உடம்பை பக்கவாட்டுக்குத் திருப்பி, மெதுவாக எழுந்தரித்தால் தலை சுற்றல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.