குழந்தைகளுக்கு வாழைப்பழம் தரலாமா?மருத்துவ பதில்!!

சின்னக் குழந்தைகளுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத அற்புதப் பரிசு என்று வாழைப்பழத்தைச் சொல்லலாம். உரிப்பதற்கும், தின்பதற்கும், செரிப்பதற்கும் எளிமையான இந்த வாழைப்பழத்தில்தான் எத்தனை சக்திகள் ஒளிந்திருக்கின்றன என்று பாருங்கள்.


* வாழைப்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் காரணமாக ஜீரணம் சிறந்த முறையில் நடைபெறும்.

* பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளின் மூளைத் திறன் அதிகரிக்கும்.

* வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் வராது. ஜீரணத்துக்கும் நல்லது.

மிகவும் சின்னக் குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை மசித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம். மலைப்பழம், ரஸ்தாளி போன்ற பழங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. செரிலாக் போன்ற குழந்தைகளுக்கான உணவுப் பொருளுடன் கலந்தும் கொடுக்கும்போது, வளர்ச்சி விகிதம் வேகமாக இருக்கும்.