ஐஐடி பாத்திமா லத்தீப் கொலை செய்யப்படிருக்கலாம்! தந்தை வெளியிட்ட அதிர்ச்சி ஆதாரம்!

சென்னை ஐ.ஐ.டி மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.


சென்னை ஐ.ஐ.டி யில் எம் பி ஏ படிப்பு படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவி கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் பாத்திமா என்ற மாணவி ஆசிரியர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவருடன் படித்துவந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் மாணவிக்கு அதிக நெருக்கடி கொடுத்து வந்தாலும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாத்திமாவின் தந்தை தனது மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக காவல்துறை ஆணையரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கூறியதாவது எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக தெரிவித்துள்ளார் ல்.இந்நிலையில் குற்றப்பிரிவு கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி என்பவரை நேரில் சந்தித்து மாணவியின் தந்தை லத்தீப் இச்சம்பவம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

இதையடுத்து வெளியே வந்து நிருபர்களிடம் கூறியதாவது, தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினர் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மாணவி இறந்த அன்று மாணவியின் அறையை முழுமையாக சோதனை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாத்திமா தற்கொலை செய்துகொண்டபோது அறையில் வேறு யாரேனும் இருந்தனரா? மற்றும் பாத்திமா உடன் தங்கியிருக்கும் மற்ற மாணவிகள் அந்த நேரத்தில் எங்கே சென்றிருந்தனர் என்பதையும் கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் சரியாக பார்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து பாத்திமாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஒரு தடையும் அவரது உடலில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் விரைந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் குற்றப் பிரிவு கமிஷனரிடம் லத்தீப் கேட்டுக்கொண்டுள்ளார்.