ஸ்டாலின்-பாத்திமா பாபு இடையிலான உறவு..! பல ஆண்டுகளாக நீடித்த புகைச்சல்..! ஆனால்? வெளியான உண்மை..!

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக உலா வந்த வதந்திகளுக்கு தற்போது சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் ‘என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை ” என்று கூறி அவற்றுக்கு எல்லாம் முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.


தொலைக்காட்சிகள் அறிமுகம் ஆனா நேரத்தில் தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு அவர்கள். இந்நிலையில், திடீரென சில மாதங்களாக தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கவில்லை பாத்திமா பாபு அப்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் தான் அவர்கள் கடத்திச் சென்று மிரட்டி உள்ளார் என்ற வதந்திகள் அந்த நேரத்தில் உலா வந்துள்ளது. அதன் பின்னர் காலப்போக்கில் அதனை மக்கள் மறந்தும் விட்டனர். பின்னர் தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ‘என் வாழ்வில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை’ என்றும் ஸ்டாலின் அவகள் கடத்தியதாகச் சொல்லப்படும் அந்தக் காலகட்டத்தில் இது குறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிகையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்த செய்திகள் அப்போது எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பிறகு என் சில மாதங்களாக நீங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றவில்லை என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த சமயத்தில் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார் அதன் காரணமாகவும், தூர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை எனக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற காரணத்துக்காவும் அந்த இடைவெளி என்று அவர் விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர் சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தொடர்ந்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு முன்பே அவரது கணவரான பாபு அவர்கள் தான் அவரை தூர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்துச் செல்வதுமாக இருந்துள்ளார். அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று அவருக்கே புரியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

இதனை குறித்து அனைவரும் விசாரிக்கையில் மேலே கூறி இருந்த காரணத்தைத் தான் அப்போது விளக்கமாக அளித்து வந்துள்ளார். அதை பற்றி நம்புவதும், நம்பாததும் அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராகப் பட்டவரின் கேரக்டரை இப்படி தவறாக பேசுவது மிகவும் தவறு என்றும் கூறினார்.

பல ஆண்டுகளாக தமிழ் நாட்டின் மக்களிடையே உலா வந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால் திமுக-வின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.