பெற்ற குழந்தையை 5வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர தந்தை! அதிர வைக்கும் காரணம்!

சீனாவிப் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரமடைந்த தந்தை ஜன்னல் வெளியே தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் வயதான தம்பதியினர் , தனது மகன் மற்றும் மருமகள் இருவரும் வேலைக்கு செல்வதால் பேரக்குழந்தையை வீட்டில் வைத்து வளர்த்து உள்ளனர். இதற்காக குழந்தையின் பெற்றோர் எந்த உதவியும் செய்யாத நிலையிலும் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர்.

குழந்தையின் தந்தை செயலிகள் மூலம் கார் டிரவராக பணியாற்றி வருகிறார். இந்த வேலை முடிந்து வீட்டிற்க்கு திரும்பிய போது நெடு நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்ததை சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்துள்ளார். குழந்தையை பாட்டியின் தோளில் இருந்து தூக்கி சென்றவர் யாரும் எதிர்ப்பாரத விதமாக ஜன்னல் வழியாக 5 ஆவது மாடியில் இருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளார்.

இந்த அதிர்ச்சியில் உறைந்து போன குழந்தையின் பாட்டி , மகன் பெட்டிப் படுக்க வைக்கதான் குழந்தையை கொண்டு போவதாக நினைத்ததாகவும், இமைப்பொழுதில் இப்படி நடக்க தான் செய்வதறியாது திகைத்து விட்டதாக கூறினார். மேலும் நிலையை சுதாரித்துக்கொண்ட பின்னர், தானே குழந்தையை கொன்றதற்க்காக குற்றவுணர்ச்சியுடன் உடனே தானும் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய முயன்ற போது தடுத்து நிறுத்தி காப்ப்பாறியதாக கூறினார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் குழந்தையின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.