மகளை மனைவியாக்கிய கொடூர தந்தை! பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு! இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வடக்கே உள்ள பந்திப்போரா மாவட்டத்தை சேர்ந்தவன் வலயாத் குரேசி. இவன் தனது சொந்த மகளையே பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்து வந்துள்ளான். இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தனது குடும்பத்தாரிடம் அந்த பெண் கூறிய போதும் குடும்பத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விடும் என்று அவர்களும் இந்த பிரச்சனையை புறந்தள்ளி உள்ளனர். தந்தையின் அரக்கத்தனம் மீண்டும் மீண்டும் தொடரவே மனம் நொந்து போன அந்த இளம்பெண் விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் தற்கொலை செய்த பின்னரே அவர் அனுபவித்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. அப்பெண்ணின் சொந்த சகோதரியை காவல் நிலையத்தில் இது பற்றி புகார் அளித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கொடூர மனம் கொண்ட அந்த தந்தையை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உடற்கூறு ஆய்வுக்காக அந்தப் பெண்ணின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு தந்தை சமூகத்திற்கே கேவலம் என்று கூறியும் அவனை தூக்கில்  விட வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெகபூபா முப்தி, ஒரு பெண் யாரைத்தான் நம்புவது என்று தெரியவில்லை என தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.