இஸ்லாம் மதத்தை கைவிட்டு ஆபாச பட நடிகையாக மாறிய இளம் பெண்! ஆத்திரத்தில் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

இங்கிலாந்து நாட்டில் மதம் மாறி ஆபாச நிறுவனம் நடத்திவந்த மகளை கொலை செய்ய திட்டமிட்ட தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் முகமது பேட்மேன் என்பவரின் 25 வயது மகள் 2017ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இஸ்லாமிய மதத்தை கைவிட்ட அந்த பெண் யூத மதத்திற்கு மாறியது மட்டுமல்லாமல் ஸ்லோவாக்கியனில் இளம் பெண்களுக்கான ஆபாச நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய மகள் இஸ்லாமியத்தை கைவிட்டு வேறு ஒரு ஒருவரை திருமணம் செய்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் தந்தை முகமது பேட்மேன். இந்நிலையில் இளம் பெண்களுக்கான ஆபாச நிறுவனம் நடத்தி ஆபாச நட்சத்திரமாக மாறியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மகளை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இதற்காக தர்யா கான் சபி என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டார் தந்தை முகமது பேட்மேன். இவர்கள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதை எப்போடியோ பிரிட்டன் எப்.பி.ஐ. என்ற தேசிய குற்றவியல் அமைப்பு ஒருவரை லண்டனிலும் ஒருவரை கோவெண்ட்ரி என்ற நகரத்திலும் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் கொலை திட்டம் தீட்டியதை செல்போனில் பேசும்போது அந்த அமைப்பு கண்டு பிடித்து விட்டதாக தெரிகிறது. கைதான முகமது பேட்மேன் ஆப்கானிஸ்தான் உளவுத்துறையில் பணியாற்றியவர் என்பது மட்டும் அல்லாமல் அமெரிக்க பாதுகாப்பு அனுமதியையும் அனுபவித்து வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.