கல்யாணம் வரை பெண்களுக்கு அப்பா தான் பாக்கெட் மணி கொடுக்கனும்! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் 18 வயதான இளம்பெண் ஒருவர், தனது கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்க்காக, தனது தந்தை மாதாந்திர பராமரிப்பு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்ற அமர்வு, இளம்பெண் மேஜர்  மேலும் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இயங்க கூடியவர் என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்தது, அந்த இளம் பெண் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே மனுவைத் தாக்கல் செய்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125ஆவது பிரிவுபடி, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 20ஆவது பிரிவையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, 18 வயதுக்கு மேற்பட்ட பெண் என்றாலும், திருமணமாகும் வரை மகளை பராமரிக்க வேண்டிய கடமை தந்தைக்கு உள்ளது என இளம்பெண்ணின் சார்பாக அவரது வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125ஆவது பிரிவு, பிள்ளைகள் மைனராக இருக்கும்வரை மட்டுமே பராமரிக்க  வலியுறுத்துகிறது எனினும் மகள்களுக்கு திருமணம் ஆகும்வரை தந்தை பராமரிக்க வேண்டியது  அவசியமாகும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியதுடன் இளம் பெண்  குடும்பநல நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்