தேனி மாவட்டத்தில் மகள் காதல் செய்வதை ஏற்க முடியாத தந்தை அவரை ஆற்றில் தள்ளி கொல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொன்னா கேட்கமாட்டியா? படிக்குற வயசுல காதலா? பெற்ற மகளை அடித்து ஆற்றில் தூக்கி வீசிய தந்தை! சின்னமனூர் பரபரப்பு!
தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்த விவிதா கல்லூரியில் படித்து வருகிறார். இவர் உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரியவர விவிதாவை தந்தை ராஜா கண்டித்துள்ளனர். ஆனால் விவிதா காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விவிதாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த அவரது தந்தை ராஜா மார்கையன்கோட்டை அருகே அழைத்து சென்று அறிவுரை கூறினார். படிக்கும் போது காதல் வலையில் வீழ்ந்து வாழ்க்கையை வீணடித்து கொள்ள வேண்டாம் என விவிதாவிடம் கெஞ்சி உள்ளார் தந்தை.
ஆனால் மீண்டும் மீண்டும் உறவினரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என விவிதா சொல்ல, ஆத்திரமடைந்த ராஜா விவிதாவை சின்னமனூர் ஆற்றில் தள்ளிவிட்டார். அரைகுறை நீச்சல் தெரிந்த விவிதா ஆற்றில் தத்தளித்தபடியே சென்று அருகே உள்ள ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் விவிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது தந்தை ராஜாவை போலீசார் கைது செய்தனர். மகளை கொல்ல முயன்றதற்கு உடந்தையாக இருந்ததாக விவிதாவின் தாய் கவிதா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பிள்ளைகள் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்காவிட்டாலும் பராவா இல்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பாமல் இருந்தால் போதும் என சில பெற்றோர் கூறுகின்றனர்.