கள்ளக்காதலனுடன் மகள் உல்லாசம்! நேரில் பார்த்த தந்தை! பிறகு நேர்ந்த சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனது மகளை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஆனந்தி என்னும் மகள் உள்ளார் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆனந்திக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனந்தியின் கணவர் திருமணமான சில நாட்களிலேயே இறந்ததால் தனது இரு குழந்தைகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிகிறது.

ஆனந்தி தனது தந்தை வசிக்கும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மேலகல்லிகுலத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அலுவலகத்தில் உள்ளவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்பு ஏற்பட்டு பின் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது.

இதையறிந்த ஆனந்தியின்  தந்தை கணேசன் பலமுறை எச்சரித்துள்ளார். அதை கண்டுகொள்ளாத ஆனந்தி தொடர்ந்து அவரிடம் தொடர்பிலேயே இருந்துள்ளார். நேற்று இரவு இது தொடர்பாக கணேசனுக்கு ஆனந்திக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் நிதானமிழந்த கணேசன் அருகிலுள்ள கயிற்றை எடுத்து ஆனந்தியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர் பின்னர் அங்கு வந்த போலீசார் ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் கொலைக்கு காரணமான கணேசனையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.