பிஞ்சு குழந்தையின் கை, காலை ஒடித்து, தரையில் ஓங்கி அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
பிஞ்சு குழந்தையின் கை, கால்களை ஒடித்து தரையில் அடித்து..! கொடூர தந்தை வெறிச் செயல்! அதிர வைக்கும் காரணம்!
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள உரியபாரா பகுதியில், ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர், வியாழக்கிழமை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதன்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தையை, ராஜூ கைப்பற்றியுள்ளார். தனது மகள் என்றும் பாராமல், அந்த குழந்தையின் கை, கால்களை பிடித்து ஓடித்த அந்த நபர், ஒருக்கட்டத்தில் வெறிபிடித்தவனைப் போல, குழந்தையை தரையில் ஓங்கி அடித்து கொன்றேவிட்டான்.
இதனை பார்த்து குடும்பத்தினர் மட்டுமின்றி, அக்கம் பக்கத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, உயிரிழந்த குழந்தையை அனைவரும் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கே குழந்தை இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் கூறியதோடு, குழந்தை இந்த நிலையை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தியதில், குறிப்பிட்ட நபருக்கு, பெண் குழந்தை பிறந்தது பிடிக்கவில்லை என்றும், அதனால், அடித்துக் கொன்றுவிட்டதாகவும் தெரிந்துகொண்டனர். பின்னர், அந்த நபரை கைது செய்ய சென்றுள்ளனர்.அதற்கு முன்பே, அவரது உறவினர்கள் கடுமையாக அவரை அடித்து, உதைத்துள்ளனர். அவர்களிடம், இருந்து கொலைகார நபரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர்.