படிக்கும் வயதில் ஆண் நண்பனுடன் உல்லாசம்! பெற்ற மகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை!

17 வயது மாணவி, ஆண் நண்பருடன் பழகியதால், அவரது தந்தையே கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுக்க, ஒருபுறம் பெண் குழந்தைகள், பாலியல் பலாத்கரம் செய்யப்படுவதும், மறுபுறம் ஆண் நண்பர்களுடன் பழகினால், அதே பெண் குழந்தைகள் கவுரவக் கொலை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் ஸ்ரீரங்க சாய்குண்டே (51).

இவரது மகளுக்கு 17 வயது. காலேஜ் படித்து வந்த அப்பெண், ஆண் நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே இருந்தது நட்பா, அல்லது காதலா என்ற விவரம் முழுதாக தெரியாத நிலையில், இந்த பழக்கத்தை நிறுத்தும்படி, சாய்குண்டே தனது மகளை எச்சரித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணோ, அதுபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து, தன் ஆண் நண்பருடன் ஃபோனில் பேசவும், மெசேஜ் அனுப்பவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நேரில் சந்தித்தும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.  இதையடுத்து, ஆத்திரமடைந்த சாய்குண்டே, கடந்த மார்ச் 23ம் தேதியன்று, கழுத்தை நெரித்து தனது மகளை வீட்டிலேயே துடிதுடிக்க கொன்றுவிட்டார். இதற்கு, அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். 

இதன்பின்னர், தனது குடும்பத்தினரின் உதவியுடன், அந்த இளம்பெண்ணின் சடலத்தை, தனது வீட்டின் அருகிலேயே உள்ள காலியிடத்தில் தீ வைத்து எரிக்கவும் சாய்குண்டே முயன்றுள்ளார். ஆனால், சடலம் பாதி எரிந்த நிலையில், சாய்குண்டேவின் இன்னொரு மகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் கூறவே, தற்போது சாய்குண்டே கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணி வருகிறார்.