என் காதல் மனைவியை மாமானார் துரத்திக் கொண்டே இருந்தார்! கணவன் வெளியிட்ட திடுக் தகவல்!

ஆந்திர மாநிலத்தில் பட்டில் இனத்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்துகொண்ட நாயுடு இனப் பெண்ணை அவரது தந்தையே சரமாரியாக வெட்டிக்கொன்றார்.


சித்தூரைச் சேர்ந்த ஹேமாவதி என்ற 23 வயது பெண்ணுக்கும் கேசவலு என்ற 27 வயது இளைஞருக்குமான காதலை பெண்ணின் வீட்டின கடுமையாக எதிர்த்து வந்தனர் இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஹேமாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்துக்குச் சென்ற நிலையில் ஹேமாவின் படிப்பு முடியும் வரை காத்திருக்குமாறு அவரதுகுடும்பத்தினர் கேசவலுவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹேமாவின் குடும்பத்தினரிடம் அவரை ஒப்படைத்துவிட்டு கேசவலு திரும்பிய நிலையில் வீட்டுக்குச் சென்றதும் ஹேமாவின் தந்தை அவரை சரமாரியாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததையடுத்து, ஹேமா வீட்டில் இருந்து தப்பி கேசவலுவிடமே வந்தார். இதையடுத்து இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் ஹேமாவிடம் பேசிய அவரது சகோதரி ஹேமாவின் சான்றிதழ்களை பெற்றுச் செல்ல அவரது கல்லூரிக்கு வருமாறு அழைத்ததை நம்பி அங்கு சென்ற போது அங்கிருந்த ஹேமாவின் தந்தை அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கேசவலு அளித்த புகாரை போலீசார் சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்து அலைக்கழித்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து ஹேமாவே தப்பி வந்ததாக கேசவலு தெரிவித்தார். இதன் பிறகு பலமுறை ஹேமாவின் குடும்பத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அது தொடர்பான தங்களின் அனைத்து புகார்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் ஹேமாவின் தந்தைக்கே ஆதரவு அளித்துவந்ததாகவும் அவர் கூறினார். 

இந்த நிலையில்தான், தங்களுக்கு குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும் கோபமடைந்த ஹேமாவின் தந்தை, அவரை கடத்திச் சென்று கொலைசெய்து கிணற்றில் வீசிவிட்டதாகவும், போலீசாரின் ஒருதலைப் பட்சமான போக்கால் தங்கள் வாழ்க்கை அவலத்தில் முடிந்து விட்டதாகவும், கேசவலு கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். 

ஹேமாவதியின் தந்தை பாஸ்கர் நாயுடு, தாய் வரலக்ஷ்மி, சகோதர, சகோதரிகள் மூன்று பேர் மற்றும் ஹேமாவின் தாத்தா ஆகிய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் குறைந்த வயதுடையவர்கள் என்பதால், இருவரும் சிறார் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.