2 குழந்தைகளை மலை உச்சியில் இருந்து வீசி கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

நாமக்கலில் குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி கொடூர தந்தையின் செயல் அப்பகுதியில் பெரும் பரப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை அருசூகவில் அமைந்துள்ள அரசம்பட்டி கிரமத்தைச் சேர்ந்த கணவன் (சிரஞ்சீவி) ,மனைவிக்கு(பாக்கியம்) இவர்களுக்கு அழகிய இரண்டு பிள்ளைகள் இருகின்றனர். முதல் மகன் கிரிதாஸ் இவனுக்கு 8 வயது. இரண்டாவது மகள் கவிதர்ஷினி இவளுக்கு 5 வயது ஆகிறது. 

இந்த நிலையில், தினந்தோறும் சிரஞ்சீவி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வதும் மனைவிவுடன் கோபித்துக் கொண்டு கவரப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிடுவதும் வழக்கமாக ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் சில சமயங்களில், 2 பிள்ளைகளையும் உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதையும் சிரஞ்சீவி வாடிக்கையாக வைத்துள்ளார். இதுமட்டுமின்றி, சிரஞ்சீவி பிள்ளைகளை மறைத்து வைத்து மனைவியை பிளாக்மெயில் செய்தும் வந்துள்ளார்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு சிரஞ்சீவிக்கும் வழக்கம் போல் இருவருக்கும் சண்டை போட்டு தகராறும் செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் சமாதானத்தை தொடர்ந்து வீடு திரும்பிய மனைவி தனது பிள்ளைகளைப் பற்றி வினாவி உள்ளார். ஆனால் சிரஞ்சீவி சரியாக பதில் அளிக்கவில்லை அதற்கு மாறாக சிரஞ்சீவி தனது பிள்ளைகளின் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட மனைவி சந்தேகமடைந்து உறவினர் வீடுகளுக்கு சென்று விசாரித்துள்ளார்.

ஆனால் பிள்ளை எந்த இடத்திலும் காணவில்லை, இந்த நிலையில், மனைவி பாக்கியம் கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் தனது பிள்ளைகள் பற்றியும் கணவரைப் பற்றியும் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், கொல்லிமலை காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது தான் தெரிய வந்துள்ளது. கொடூர தந்தையின் செயல். அதனை கேட்டு அதிர்ந்து போனா காவல் துறையினர் சிரஞ்சீவியை விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளார். 

அந்த விசாரணையில், கடந்த 11ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராயின் காரணமாக இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு செம்மேடு சீக்குபாறை பகுதிக்கு சென்று, அங்குள்ள வியூ பாயிண்ட் மீது ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இருந்து இரு பிள்ளைகளையும் தூக்கி வீசி விட்டு வீட்டுக்கு வந்ததாக சிரஞ்சீவி கூறியுள்ளார். மனைவியின் மீது ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக இவ்வாறு செய்துவிட்டதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

குடிப் பழக்கம், அதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி மலைமீதிருந்து வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரப்பப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் சிரஞ்சீவி வாக்கு மூலத்தின் அடிப்படையாக கொண்டு காவல் துறையினர், இரண்டு சிறார்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இரண்டு குழந்தைகளை மலை மீதிருந்து வீசிக் கொன்ற தந்தை சிரஞ்சீவியை கைது செய்தனர்.