மகளை கடத்தி மந்திரவாதியை அழைத்து வசிய பூஜை! நள்ளிரவில் காதல் திருமணம் செய்த இளம் பெண்ணுக்கு விபரீத அனுபவம்!

திருமணம் செய்த கணவரை மறக்கடிக்க மந்திரவாதி மூலம் வசியம் செய்ய முயற்சி செய்த சம்பவம் குமரியில் அரங்கேறி உள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கொடுப்பைகுழியைச் சேர்ந்த சுரேஷ்குமார். என்பவரும் காரங்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷாவு என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் சுரேஷ்குமாரும், அனிஷாவும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இரணியல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர் காவல்நிலையம் வந்த பெற்றோர் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரின் சமரச பேச்சை ஏற்க மறுத்தனர்.

சுரேஷ்குமாரும், அனிஷாவும் மேஜர் என்பதால் எதுவு செய்ய முடியாது என கூறி அவர்களை போலீசார் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மனைவி அனிஷாவுடன் சுரேஷ் குமார் பரமார்த்தலிங்கபுரத்தில் சகோதரி வீட்டிற்கு வந்தார். தகவல் அறிந்து வந்த அனிஷாவின் உறவினர்கள் அவரை காரில் கடத்தி சென்றனர்.

இரணியல் அருகே உள்ள ஒரு மந்திரவாதி வீட்டிற்கு அனிஷா அழைத்து செல்லப்பட்டு அவருக்கு வசிய மந்திரம் செய்யப்பட்டது. அதாவது தன்னுடைய கணவரை மறந்துவிட்டு பெற்றோருடன் செல்வதற்கு மந்திரம் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார் அனிஷா. ஓடும் போது கால்தடுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தார் அனிஷா.

பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் அனிஷாவின் உறவினர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த அனிஷாவை வசியம் செய்து மாற்றுவதற்காக மந்திரவாதியிடம் அழைத்து சென்றதாகவும் ஆனால் தப்பித்து வந்து விட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

பின்னர் கிராம மக்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி படுகாயம் அடைந்த அனிஷாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அனிஷா தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தார்.