ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொடூர கொலை..! பிறகு மாமனார் எடுத்த பதற வைக்கும் முடிவு! அடுத்தடுத்து அரங்கேறிய பதைபதைப்பு சம்பவம்!

பெங்களூரு: மருமகளை கத்தியால் குத்திக் கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.


கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி வாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் கடந்த நிலையில், அருணின் தந்தை ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விநோதமாக நடந்துகொள்ள தொடங்கியிருக்கிறார். ஆம், 

மருமகள் என்றும் பாராமல் தனது மகன் வெளியே சென்ற நேரங்களில், ரமேஷ் அடிக்கடி வாணிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். 48 வயதான ரமேஷின் காமவெறிக்கு வாணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் வாணியை பலாத்காரம் செய்யவும் ஆரம்பித்துள்ளார்.

இப்படியாக, ஓராண்டுக்கும் மேலாக, வாணியை வீட்டிற்குள்ளேயே வைத்து கதற கதற மாமனார் ரமேஷ் பலாத்காரம் செய்து வந்த நிலையில், இதுபற்றி தெரியவந்ததும் மகன் அருண் போலீசில் புகார் அளித்தார். அத்துடன் வேறு வழியின்றி, கடந்த மாதம் முதலாக, தனி வீட்டில் குடித்தனம் செய்ய ஆரம்பித்தனர்.  

அருண், வாணி தனிக்குடித்தனம் சென்ற பிறகும் ரமேஷ் விடவில்லை. எந்நேரமும் கையில் 'கத்தியை' பிடித்தபடி வாணியை துரத்த தொடங்கியுள்ளார். சாலையில் வாணி நடந்துசென்றால் கூட அவரை விடாமல் துரத்திச்சென்று அங்கங்களை தொடுவதும், முறைகேடாக நடக்க முயற்சிப்பதும் ரமேஷின் வழக்கமாக இருந்திருக்கிறது.

இப்படியே சில நாள் சென்ற நிலையில் கடந்த நவம்பர் 9ம் தேதியன்று கடைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய வாணியை ரமேஷ் வழக்கம்போல சீண்டியுள்ளார். 'இப்பவே என்னுடன் வந்து படு,' என்று ரமேஷ் தொல்லை தர வேறு வழியின்றி வாணி தப்பி ஓட தொடங்கினாராம். ஆனால் விடாத ரமேஷ் அவரை துரத்திச் சென்று கத்தியால் குத்திக் கொன்றுவிட்டார்.  

சாலையிலேயே பலர் பார்க்க மருமகளை குத்திக் கொன்ற ரமேஷை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.