சமையல் அறையில் மருமகளை தீண்டிய மாமனார்! வீடியோ எடுத்து அசிங்கப்படுத்திய தரமான சம்பவம்!

மும்பை: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலம், விரார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 50 வயதாகும் ஆட்டோ டிரைவர் ஒருவர்  தனது மருமகளிடம் அவ்வப்போது பாலியல் தொல்லை தரும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்.

இதன்பேரில், அந்த பெண் தனது கணவரிடம் புகார் கூற, அவரோ நம்ப மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சமையற்கட்டில் செல்ஃபோன்  ஒளித்து வைத்த மருமகள், தனது மாமனாரின் லீலைய படம்பிடிக்க முடிவு செய்துள்ளார். 

அவரது திட்டத்திற்கேற்ப, யாரும் இல்லாத நேரம் அவர் சமையற்கட்டில் இருக்கும்போது அங்கு வந்த மாமனார் மருமகள் என்றும் பாராமல் தைரியமாக மார்பகத்தில் கை வைத்துள்ளார்.

இதனை மருமகள் எதிர்த்ததும், அந்த நபர் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.  பின்னர் தனது கணவர் வந்ததும் இந்த வீடியோவை போட்டு காண்பித்துள்ளார். இதைப் பார்த்ததும் உடனடியாக தனது தந்தையை மகன் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு அவர், உடனே மகனையும், மருமகளையும் வீட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளார். 

இதையடுத்து, செல்ஃபோன் வீடியோவை ஆதாரமாக வைத்து, விரார் போலீசில், கணவன் மனைவி புகார் அளிக்க, அவர்கள் அந்த காமக்கொடூர மாமனாரை கைது செய்துள்ளனர்.