கொடூர புற்று நோய்! மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வருங்கால மாமனார்! அங்கு சென்று மருமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

இண்டியானா: மரண படுக்கையில் உள்ள தந்தை கண் முன்னே திருமணம் செய்த மகள் பலரையும் வியப்படைய செய்துள்ளார்.


அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இவான்ஸ்விலே பகுதியை சேர்ந்தவர் ஷெல்பி ஷீவெய்கார்ட். இவர், ஜேரத் கான்வில் என்பவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதன்படி, அக்டோபர் 2020, 3ம் தேதியன்று திருமணத்திற்காக நாள் குறிக்கப்பட்டது. இந்நிலையில், ஷெல்பியின் தந்தைக்கு திடீரென விதைப்பையில் புற்றுநோய் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மருத்துவமனையில் மரண படுக்கையில் உள்ள ஷெல்பியின் தந்தை, தன் கண் முன்னே மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என விரும்பினார்.  

இதேபோல, ஷெல்பியும், மாப்பிள்ளை ஜேரத்தும் மருத்துவமனையில் திடீரென தங்களது யோசனையை தெரிவித்தனர். அவர்களின் யோசனையும் ஒரே மாதிரி இருந்தது. இருவரும் திருமணத்திற்கு ஒரே நேரத்தில் தகுந்த ஏற்பாடுகளுடன் வந்தனர். இதன்படி, மரண படுக்கையில் உள்ள ஷெல்பியின் தந்தை கண் குளிர பார்த்து, கைதட்டி வாழ்த்த அவருக்கு மோதிரம் அணிவித்து, ஜேரத் மணந்துகொண்டார்.

இதனை மருத்துவர்களும் பாராட்டி, வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.