பச்சிளம் குழந்தையின் முகத்தின் மீது ஏறி நின்று போட்டோ! கொடூர தந்தையின் விபரீத செயல்!

சீனாவில் 20 மாத மகளை நாய்க்கூண்டில் அடைத்தும், உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்படுத்தியும் முகத்தில் ஏறி நின்றும் புகைப்படம் எடுத்த ஒருவன் அதனை குழந்தையின் தாயான முன்னாள் மனைவிக்கு அனுப்பிய கொடூரம் அரங்கேறியுள்ளது.


சூ டிங் என்ற பெண்ணின் கணவன் அந்தப் பெண்ணை அடிக்கடி பாலியல் ரீதியாகவும், குடும்ப வன்முறைக்கும் உட்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதெல்லாம் போலீஸார் மெத்தனமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார். 

ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் அதனை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் கூறியதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் விவாகரத்தான நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தை கணவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் மனைவியை பழிவாங்குவதாக கருதி மகளை சித்ரவதை செய்து அந்தப் புகைப்படத்தை மனைவிக்கு அந்த கொடூரன் அனுப்பிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.