கிட்னிக்கள் இரண்டும் செயல் இழந்தன! உயிருக்கு போராடிய மகனுக்கு தனது கிட்னியை கொடுத்த தந்தை! நெகிழ்ச்சி சம்பவம்!

சேலத்தில் மகனுக்கு சிறுநீரகம் செயலிழந்தால் தந்தை தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார்.


சேலத்தை சேர்ந்தவர் சேகர் 32, இவருக்கு பல வருடங்களாக சிறுநீரக கோளாறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறுநீரகம் கிடைக்கும்வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது தந்தை தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து மாற்று அறுவை சிகிச்சை மூலம் தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை முடித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைவர் பெரியசாமி கூறியதாவது முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டின் மூலம் தந்தையின் சிறுநீரகத்தை மாற்றி மகனுக்கு பொருத்தி உள்ளதாகவும் இந்த அறுவைச் சிகிச்சை தங்களின் மருத்துவ குழுவினரால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.