புதிதாக பிறந்த மகனுக்கு கொடூர நோய்..! தனது கல்லீரலை தானமாக கொடுக்க 20 கிலோ எடை குறைத்து நெகிழ வைத்த தந்தை! ஏன் தெரியுமா?

நியூயார்க்: தனது மகனுக்கு கல்லீரலில் ஒருபகுதியை தானமாக வழங்க, தந்தை முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


நியூயார்க்கை சேர்ந்தவ சீன். இவரது மனைவி ஜோஸி. இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, சாயர் கெல்லி எனப் பெயரிட்டனர். ஆனால், சில மாதங்களிலேயே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு #AlagilleSyndrome எனும் மரபணு நோய் இருப்பதை கண்டறிந்தனர். இந்த நோயால் சிறுவனின் கல்லீரல் செயல்பாடு முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு அவனது தாயிடம் இருந்து, சிறுவனுக்கு பரவியதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.  

இந்நிலையில், சிறுவனுக்கு சில மாதங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திட வேண்டும், இல்லை எனில் உயிரை காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கவே, அவனது தந்தை சீன் தனது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிக உடல் எடை இருப்பதால் சீன் உடலில் இருந்து கல்லீரல் எடுக்க முடியாது எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, கடந்த ஓராண்டாக, கடும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமாக, சீன் சுமார் 40 கிலோ எடையை குறைத்துள்ளார். மகனுக்காக, தனது எடையை குறைத்ததாகக் கூறும் அவரிடம் இருந்து, கடந்த டிசம்பர் 19, 2019 அன்று கல்லீரலை வெட்டி எடுத்து, சிறுவனுக்கு வெற்றிகரமாக மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். தற்போது, தந்தையும், மகனும் உடல்நலம் தேறிவருகின்றனர்.