பிரிந்து சென்ற மனைவிக்கு பிறந்த குழந்தை உயிருக்கு போராட்டம்! தன் கல்லீரை தானமாக கொடுத்து நெகிழச் செய்த கணவன்!

லண்டன்: மகனுக்கு கல்லீரல் தானம் அளித்து அவனது உயிரை காப்பாற்றிய தந்தைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


பிரிட்டனில் உள்ள நோர்ஃபோல்க் பகுதியை சேர்ந்தவர் மேட் பிரைஸ். இவருக்கு, ஏற்கனவே  2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக பிறந்த காலன் என்ற சிறுவனுக்கு, கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே கடும் உடல்நலக் கோளாறால் அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்து உயிரை காப்பாற்றி வந்தனர்.

அதேசமயம், மாற்று கல்லீரல் கோரி சிறுவனின் தாய் விண்ணப்பித்தார். இதற்கிடையே, மேட் பிரைஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கருத்து வேறுபாட்டால் மனைவியுடன் பேசாமல் இருந்த நிலையில், மகனின் உடல்நலம் பற்றி கேள்விப்பட்டு, மனம் வெதும்பிய மேட் பிரைஸ், உடனடியாக மருத்துவமனையில் உள்ள மகனை பார்க்க ஓடோடி வந்தார்.

மகனை காப்பாற்ற போராடிய பிரைஸ், கல்லீரல் தானம் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என்ற தகவல் கேட்டு வருந்தினார். உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவர், தனது கல்லீரலில், 20 சதவீதத்தை மகனுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தானமாக அளித்தார்.

இதையேற்று மருத்துவர்களும் சிறுவனின் உடலில் அதைப் பொறுத்த, சிறுவன் தற்போது உடல்நலம் பெற்று கண்விழித்துள்ளான். கண்ணீர் மல்க, தனது மகனை கையில் ஏந்தியபடி மேட் பிரைஸ் போஸ் தரும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

நவீன உலகில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடலிலேயே அம்மோனியா தங்கிவிடுவதால் கல்லீரல் செயலிழக்க நேரிடுகிறது. அதுதான் சிறுவன் காலனுக்கும் ஏற்பட்ட பாதிப்பு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.