இப்படியும் கேவலமான ஒரு தந்தையா..? பெற்ற மகளையே பாலியல் தொழிலில் தள்ளும் கொடூரம்

கடந்த சில மாதங்களாக ஒரு சிறுமியை ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வந்தது. முதலில் அந்த வீடியோ வெளியான போது திருமணம் செய்து கொள்ள மறுத்த மகளை தந்தை தாக்கியதாக தகவல்கள் வெளியானது. பெற்ற மகளை தந்தை கொடூரமாக தாக்கும் அந்த சம்பவம் நடைபெற்றது அசாம் மாநிலத்தில். மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.


அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் இருப்பது மொவமாரி கிராமம். இங்கு வசிக்கும் கூலித்தொழிலாளியான ஜமாலுதீனுக்கு 15 வயதில் சிறுமி இருக்கிறாள். ஜமாலுதீனுக்கு ஏற்கனவே பாலியல் தொழில் செய்யும் நபர்களோடு தொடர்பு இருந்திருக்கிறது.

இந்நிலையில் அங்கு பாலியல் தொழிலை கொடி கட்டி பறக்கும் அளவுக்கு நடத்தி வந்த சிலர் உன் மகளை அனுப்பி வை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர். கூலித் தொழில் செய்து அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் பட்டு வந்த ஜமாலுதீன் பெற்ற மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட சம்மதித்துள்ளார்.

 இதில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால் ஜமாலுதீனின் தாயும் இதற்கு உடந்தை. ஆனால் செத்தாலும் பாலியல் தொழிலில் ஈடுபடமாட்டேன் என்று சிறுமி உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஜமாலுதீன் அவரது குழந்தையை வீதிக்கு அழைத்து வந்து கொடூர தாக்குதல் நடத்தினார்.

அவரது பாட்டியும் உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார். இந்த சம்பவத்தில் மயங்கிப் போன சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து வீடியோவை வைரலாக்கி விட்டார்.

அதே சமயம் சிறுமியை யாருமே காப்பாற்ற முன்வராமல் வேடிக்கை பார்த்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் சிறுமியின் தாய் தந்த காரில் தற்போது ஜமாலுதீன் அரசாங்கம் கட்டிக் கொடுத்துள்ள மாமியார் வீட்டில் கம்பி எண்ணி வருகிறார்.

இந்த வழக்கு குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவருடன் வாழ்ந்து வந்த மனைவிகளையும் பாலியல் தொழில் செய்யுமாறு கட்டளை இட்டதால் சம்மதிக்காமல் பிரிந்து சென்றுவிட்டனர்.  சிறுமிக்கு சில நாட்கள் ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் தேறியபின் அவரையும், அவரது தாயையும் உறவினர் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தது போலீஸ். 

சமுதாயத்தில் ஆண்களிடம் பத்திரமாக பழகவேண்டும் என தந்தை கூறும் அறிவுரையை கேட்கும் குழந்தைகள் இது போன்ற செய்தியை படிக்கும்போது தந்தையிடம் எப்படி நம்பிக்கையுடன் பழகும் என்பதுதான் நமது கேள்வி.