ஹாஸ்பிடல் வந்த கர்ப்பிணி மகளை ஓட ஓட விரட்டி வெட்டிய தந்தை! மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த மகளை கர்ப்பிணி என்றும் பாராமல் சரமாரியாக வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நாகையா புரத்தை சேர்ந்தவர் வாலை குருநாதன். இவரது மகள் சுஷ்மா. இவர் பள்ளிக் காலத்து தோழனான சிவசங்கரனை கல்லூரியிலும் காதலித்தார்.

சிவசங்கரன் வேறு சாதியைச் சேர்ந்தவர் சுஷ்மா. கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்ட போதிலும் காதல் மட்டும் தொடர்ந்தது. இது குறித்து தெரிய வந்தபோது வழக்கம்போல எரிமலை வெடித்தது.

குடும்பத்தினர் எதிர்ப்பை அடுத்து இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து இருவரும் சிவசங்கரனின் சொந்த ஊரான வாழ வந்தால் புரத்தில் வசித்து வந்தனர்.

சுஷ்மா கருவுற்ற நிலையில் சிவசங்கரனும் சுஷ்மாவும் திருமங்கலத்தை அடுத்த டிபுதுப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்தனர். இந்த தகவலை அறிந்து கொண்ட வாலை குருநாதன் கையில் அரிவாளுடன் அங்கு சென்று சுஷ்மாவை தலை முதுகு கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

அப்போது மருத்துவரைச் சந்திக்கச் சென்று இருந்த சிவசங்கரன், வெளியே வந்தபோது சுஷ்மா அவை வாழை குருநாதன் வெட்டுவதை கண்டு பதற்றத்துடன் ஓடி வந்து அரிவாளை பிடுங்கி வீசினார். மேலும் அங்கு கூட்டமும் கூடியதை அடுத்து குருநாதன் தப்பி ஓடினார்.

சுஷ்மாவுக்கு அந்த மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாலை குருநாதனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.