வெளிநாடு சென்ற மகன்! தவித்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார்! அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் தனது மகன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கைவிட்டதால் அவரது தந்தை மருமகளை மகளாக ஏற்று திருமணம் செய்துவைத்து தனது அனைத்து சொத்துக்களையும் மருமகளுக்கு கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கேரள மாநிலம் திருநக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி, இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் அவரது மகன் 12ஆம் வகுப்பு படிக்கும் போது உடன் படித்த பள்ளி மாணவி மீது காதல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இருவரும் காதலித்து வந்த போது இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்காமல் போயுள்ளது. இந்நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களது மகளை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த புகார் காவல்துறையினர் விசாரிக்கையில் பெண் தனது சொந்த விருப்பத்தோடு தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் எனக்கும் என் மகளுக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் கிடையாது.என காவல் நிலையத்திலேயே எழுதி வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதனால் மனமுடைந்த ஷாஜி அவர்களது மகளை தனது சொந்த மகளாக வளர்ப்பேன் என உறுதி எடுத்துள்ளார். பின்னர் மருமகளை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நாளடைவில் ஷாஜி தனது மகனை வளைகுடா நாட்டிற்கு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து தனது தந்தையின் எதிர்ப்பை மீறியும் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த அவரது தந்தை தனது சொந்த ஊருக்கு வந்து தனது மருமகளுக்கு நல்ல வரன் தேடி திருமணம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் தனது அனைத்து சொத்துக்களுக்கும் வாரிசு எனது மருமகள் தான் எனவும் தனது சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு சேரும்படி உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் தன் வீட்டிற்கு வந்த மருமகளை சொந்த மகனாக ஏற்று அவருக்கு திருமணம் செய்து கொடுத்து தானே அனைத்து சொத்துக்களையும் அவர் மேல் எழுதி வைத்த ஷாஜி என்பவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.