சமீபத்தில் பேஸ்புக் , வாட்சப் என அனைத்து சமூக வலைதளங்களிலும்.அப்பா வயது மதிக்க தக்க நபரை ஒரு இளைஞர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளிதாகி வைரல் ஆகி வருகிறது.
என் சரக்கு பாட்டில ஏன்யா காலி பண்ணுன..! பெற்ற தந்தைக்கு மகனால் ஏற்பட்ட விபரீதம்!

போலீசார் கவனத்திற்க்கு சென்ற வீடியோவை ஆதாரமாக கொண்டு விசாரணை துவங்கியதில் மதுவுக்காக சொந்த அப்பாவையே மகன் புரட்டி புரட்டி அடித்துள்ளது அம்பலமானது. கேரள மாநிலத்தில், ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ், 29 வயதான ரித்தீஷ் கடந்த காந்திஜி ஜெயந்தி அன்று மதுக்கடை மூடி இருக்கும் என்பதால், முன் எச்சரிக்கையாக சர்க்கு பாட்டிப் வாங்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்று ரித்தீஷின் அப்பா, மகன் வாங்கி வைத்த சரக்கை எடுத்து யாருக்கும் தெரியாமல் குடிக்க, விஷயம் தெரிந்த ரித்தீஷ் அப்பா என்றும் பாராமல் அரை நிர்வாணத்தில் அவரை அடி பொளந்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் இந்த காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் வைரல் ஆனதை அடுத்து, போலீசார் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்தது மட்டும் அல்லாமல் மகன் ரித்தீஷ் மீது 6 வழக்குகள் பதியபட்டுள்ளது.