உயிரிழந்த மகன் சடலத்துடன் 2 நாட்கள் வசித்த தந்தை! சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்!

சென்னையில் மகன் இறந்தது தெரியாமல் உடலுடன் தூங்கிய தந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை அடையாறில் வசித்து வரும் கலைக்கண்ணன் (வயது 70)கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக மனைவியை இழந்ததால் ஒரே மகனுடன் வசித்து வந்தார்.மகனும் மூளை வளர்ச்சி இல்லாதவர் என்பதால் இருவரும் தனி உலகமாக அன்பில் திலைத்தபடி வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கலைக்கண்ணன் வீட்டின் கதவை திறக்காத நிலையில், திடீரென துர்நாற்றம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல்க் கொடுக்க கதவை உடைத்து பார்த்த போது, மகன் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

மேலும், அருகில் கலைக்கண்ணன் மகன் இறந்தது கூடத்தெரியாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக கலைக்கண்ணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

மேலும் இருவரது உடலின் பிரேத பரிசோதனை க்கு பின்னர் தான்,அவர்களது மரணம் எதேர்ச்சியானது என நிரூபணமாகும் .