அராத்து இளைஞனின் அதிவேக பைக் ரைடு! அப்பாவி இளம்பெண் பலியான பரிதாபம்!

திருவள்ளூரில், கல்லூரிக்கு செல்ல தந்தை உடன் புறபட்ட மாணவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசனின் மகள் கீர்த்திகா. திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்த கீர்த்திகா, வழக்கம் போல  கல்லூரி செல்ல  தந்தையுடன் பைக்கில் புறப்பட்டார்.

மேட்டுப்பாளையத்திலிருந்து  திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, புல்லரம்பாக்கம் கிருஷ்ணா கால்வாய் அருகே  எதிரே அதிவேகமாக வந்த அராத்து ஒருவனின் மற்றொரு பைக்  மோதியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது தந்தை பலத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் விஷ்வநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்இது தற்ச்செயலான விபத்து தானா அல்லது திட்டமிட்டு நடத்தபட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.