கார்த்திகை தீப திருநாளில் தீப்பிடித்து பலியான அப்பாவும் மகளும்! அரியலூர் பரிதாபம்!

கார்த்திகை தீப திருநாளில் தீப்பிடித்து தந்தை மகள் பலி.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே அமைந்துள்ளது கழுமங்கலம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் செல்வம்( வயது 50) என்பவர் சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கார்த்திகை தீப திருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த சூழலில்.

வழக்கம் போல செல்வம் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீப ஒளி திருநாளை கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோல் கேனில் நெருப்பு பிடித்துள்ளது. நெருப்பை அணைக்க வீட்டின் உள்ளே சென்ற செல்வம் மீது தீப்பற்றியுள்ளது.

இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரைக் காப்பாற்ற முயன்ற போது. அவரது இளைய(வயது 20) மகளும் தீயில் சிக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே செல்வம் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும் மிகத் தீவிர தீக்காயங்களுடன் அவரது மகள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சியாக கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாட இருந்த குடும்பம் . தீயில் சிக்கி இறந்துள்ள சம்பவம் கழுமங்கலம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

மணியன் கலியமூர்த்தி