அசந்த நேரத்தில் ஆக்சிலேட்டரை ஒரே ஒரு திருக்கு..! மகளின் செயலால் தந்தைக்கு நொடியில் ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி வீடியோ!

ஜான்சி: தந்தையை பைக்கை மகள் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் ஓட்டல் ஒன்று நொறுங்கிய கதைதான் இந்த செய்தி.


உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிப்ரி பஜாரில் ஓட்டல் ஒன்றின் வெளியே ஒரு சிறுமியும், அவரது தந்தையும் பைக்கில் நின்றுகொண்டிருந்துள்ளனர். சிறுமியை பைக்கில் அமர வைத்தபடி, அவரது தந்தை நின்றுள்ளார்.

ஆனால், பைக் சாவியை எடுக்க மறந்துவிட்டதால், அந்த சிறுமி திடீரென விளையாட்டாக, பைக்கை ஸ்டார்ட் செய்துள்ளார். இதில், கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே இருந்த ஓட்டலில் பாய்ந்து சென்று அடுப்பு, மேஜைகள் உள்ளிட்டவற்றின் மீது மோதி தகர்த்தது.

இதுதவிர அடுப்பில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாத்திரம் சிறுமியின் மேலே கவிழ, அவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிவிட்டது. வலியில் துடித்த சிறுமியை உடனடியாக பொதுமக்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.