தந்தையால் மகளுக்கு நேர்ந்த பாலியல் விபரீதம்! 3 வருடங்களுக்கு பிறகு அம்பலமான பகீர் சம்பவம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தந்தை தன்னை 3 ஆண்டுகளுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயதுச் சிறுமி அளித்த புகாரின் பேரில் தந்தை மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


பாட்னாவை அடுத்த ராஜேந்தர் நகர் என்ற இடத்தைச் சேர்ந்த சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அவரது தாய் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை சிறுமி தனது தாயை அணுகி 3 ஆண்டுகளுக்கு முன் தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து தனது தாயுடன் காவல் நிலையத்துக்கு வந்த அந்தச் சிறூமி தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்தச் சிறுமியின் தந்தை மீது போலீசார் பாலியல் பலாத்காரம் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தந்தை தலைமறைவான நிலையில் அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதனிடையே ராஜேந்திர நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 6 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கயவனை கிராம மக்கள் அடித்து உதைத்து காயப்படுத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

சிறுமி அந்த நபரின் வீட்டுக்குச் சென்றதை சிறுமியின் தாய் பார்த்த நிலையில் அதன் பிறகு சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அந்தப் பெண் அந்த நபரின் வீட்டுக்குச் சென்று அது குறித்துக் கேட்ட போது அந்த நபர் முறையாக பதில் அளிக்காததோடு தன் வீட்டுக் கதவையும் திறக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவனது வீட்டுக்கு திரண்டு சென்ற கிராம மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அந்த நபரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள் அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்ததோடு கழுத்தை நெறித்து கொல்ல முயன்றதும் தெரிய வந்தது. அந்தச் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதையடுத்து அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.