பாரதப் பிரதமர் மோடி தேர்தலில் நிற்கப்போகும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடப்போகிறோம். அந்தத் தொகுதியில் பிச்சை எடுத்து வேட்பு மனுவுக்கு பணம் திரட்டப் போகிறோம் என்று குரல் கொடுத்தார் அய்யாக்கண்ணு.
நிர்வாண அய்யாக்கண்ணு செம பல்டி! பணத்துக்காக விவசாயிகளுக்கு பட்டை நாமம்!

ஏற்கெனவே இவர் தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பு கிளப்பியவர் என்பதால், இந்த அறிவிப்பு டெல்லியை அதிர வைத்தது. ஏனென்றால் 100 பேருக்கு மேல் தேர்தலில் நின்றால், அங்கு தேர்தல் இயந்திரம் பயன்படுத்த முடியாது. இதனால் மோடிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், அவரை அமுக்கும்படி உத்தரவு பிறக்கப்பட்டதாம்.
இந்த நிலையில் திடீரென தமிழக அமைச்சர் தங்கமணியும் அய்யாக்கண்ணுவும் சந்தித்து ரகசியமாகப் பேசினார்கள். இதையடுத்து உடனே டெல்லிக்கு விமான டிக்கெட் போடப்பட்டது. நேற்றைய தினமே ,விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில்போய் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அமித்ஷாவுடனான இந்த சந்திப்பின்போது சந்திப்பில் பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர் தங்கமணியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் எல்லாமே மாறிவிட்டது.
ஆம், செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, வாரணாசி தொகுதியில் விவசாயிகள் யாரும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். ஏனென்றால், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு இருக்கிறதாம். அதனால் தேர்தலில் வெற்றிபெற்றதும் நதிகள் இணைக்கப்பட்டு விவசாயிகளுக்கு எல்லாமே நல்லதாக நடந்துவிடுமாம். அதனால் போட்டி வாபஸ் என்று அறிவித்துவிட்டார்.
ஏதோ பெரிய டீலிங் போயிருக்கு, எத்தனை கோடிக்கு எங்களை வித்தாருன்னு தெரியலையே என்று விவசாயிகள் அய்யாக்கண்ணுவின் திடீர் பல்டியை நினைத்து புலம்புகிறார்கள்.
இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் அய்யாக்கண்ணு?