அதிக மதிப்பெண்களுக்காக படுக்கையை பகிர்ந்த மாணவிகள்! பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்கள்!

ஒரு அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கூறி அவர்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய கல்லூரியின் ஆய்வக உதவியாளர் மற்றும் இரண்டு பேராசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹரியானாவின் பரிதாபாத் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் கடந்த சில நாட்களாகவே அங்கு பயிலும் மாணவர்களை அவர்களுக்கு சிறப்பு வகுப்பு உள்ளது என அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவி ஒருவர் ஆய்வக உதவியாளர் பாலியல் இச்சைக்கு அழைத்து பேசுவதை தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து அதை போலீசில் காட்டியுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனே கல்லூரிக்கு விரைந்து வந்து ஆய்வக உதவியாளர் மற்றும் இரண்டு பேராசிரியர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆய்வக உதவியாளர் இடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் அவர் கூறியதாவது: படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதாக கூறி அவர்களுக்கு வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி அவர்களை தனது கல்லூரி நிர்வாகத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு விருந்தாகி வந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் இவ்வழக்கில் கல்லூரியைச் சேர்ந்த 2 பேராசிரியர்கள் மற்றும் மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது எனவும் ஆய்வக உதவியாளரிடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல மாணவிகள் இதுகுறித்து வெளியில் சொன்னால் தங்களது படிப்பிற்கு ஏதேனும் தடங்கல் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி பலர் இது குறித்து வெளியில் புகார் அளிக்காத வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கில் மூவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாணவிகள் கூடுதல் மதிப்பெண்களுக்காக தாங்களே முன் வந்து படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் அவர்களை பேராசிரியர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் விசாரணையில் அந்த ஆய்வக உதவியாளர் கூறி அதிர வைத்துள்ளார்.