விஜயின் தளபதி 63 படத்தின் டைட்டில் என்ன? தயாரிப்பாளர் வெளியிட்ட ஹாட் அப்டேட்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படம் 'தளபதி 63' இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'தளபதி 63' இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று மாலை சரியாக 6 மணி அளவில் தளபதி 63 படத்தின் அப்டேட் ஒன்று வெளியானது. அதில் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இளையதளபதி விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதி மாலை 6 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஜூன் 22ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்த அறிவிப்பைக் கேட்ட தளபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இளைய தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.