என்ன அதுக்கு கூப்டனலா உன் காதலியை கொன்று விடுவேன் : பிரபல நடிகரை மிரட்டும் வெறி பிடித்த ரசிகை!

''என்னை சந்திக்க மறுத்ததால் உன் காதலியை கொல்லப் போகிறேன்,'' என்று , நடிகர் வருண் தவானுக்குரசிகை ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.


பாலிவுட் நடிகர் வருண் தவான், போலீஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி மிட்டே பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் வருண் தவான் மற்றும் ஃபேஷன் டிசைனராக உள்ள நடாஷா தலால் ஆகிய 2 பேரும் காதலித்து வருகின்றனர்.இந்நிலையில், வருண் தவானை சந்திப்பதற்காக, அவரது வீட்டிற்கு, பெண் ரசிகர் ஒருவர் வந்துள்ளார். ஆனால், பணி நெருக்கடி காரணமாக, அவரை சந்திக்க வருண் தவான் மறுத்திருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த ரசிகர் இன்னும் சில மணி நேரத்தில், உன் காதலி நடாஷாவை கொல்லப் போகிறேன், என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சித்ரவதை செய்து,நடாஷாவை கொல்வேன், என்றெல்லாம் விதவிதமாக, அவர் பேசியுள்ளார். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த செக்யூரிட்டி அதிகாரிகள், வருண் தவானிடம் சொல்ல, அவர் உடனே போலீசில் புகார் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

இதன்பேரில், தற்போது போலீஸ் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.