திருமணமாகி வருசம் ரெண்டாச்சி..! இன்னும் வயித்துல புழு பூச்சி கூட உருவாகல! நடிகை எடுத்த விவகாரமான முடிவு!

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் நடிகை வேறு ஒரு முடிவை எடுத்துள்ளார்.


தமிழ் சினிமாவில் ஒரே சினிமா மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆன ஹீரோயின் அவர். அந்த படத்தின் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை என்பதோடு மட்டும் அல்லாமல் தேசிய விருதையும் பெற்று அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தவர். 

ஆனால் அந்த படத்திற்கு பிறகு நடிகையின் போக்கு மாறியது- சரியான கதையை தேர்வு செய்து நடிக்கத் தெரியவில்லை. ஹீரோக்களுக்காக தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் நடிகை கண்ட கண்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் மார்ககெட் போன நடிகை ஒரு வழியாக தனது வயது 30ஐ தாண்டிய பிறகு திருமணம் செய்து கொண்டார். திரையுலகை சேர்ந்தவராக இல்லை என்றாலும் திரையுலகுடன் தொடர்புடைய அந்த நபரை மணம் முடித்துவிட்டு சென்னையை விட்டே வெளியேறி வேறு ஒரு மாநிலத்தின் தலைநகரில் நடிகை செட்டில் ஆனார்.

இனிமே எனக்கு குடும்பம் குழந்தைகள் தான் என்று நடிகை அப்போது பேட்டி வேறு கொடுத்திருந்தார். ஆனால் திருமணமாகி 2 வருடங்கள் ஆன பிறகும் நடிகையின் வீட்டில் இருந்து சந்தோசமான செய்தி எதுவும் வரவில்லை. இதனால் பொருத்து பொறுத்து பார்த்த நடிகை மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் தனது கவனம் முழுவதையும் வெப் சீரிஸ் பக்கம் திருப்பியுள்ளாராம். குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்கத்தான் இந்த முடிவாம். இதனை புரிந்து கொள்ளாமல் நடிகையின் கணவன் வேறு அவ்வப்போது தகராறு செய்வதால் வீட்டு பக்கமே போகாமல் ஹோட்டலே கதி என்று கிடக்கிறாராம் நம்ம நடிகை.