டேல் ஸ்டெயினுக்கு தோள் பட்டை காயம்! உலக கோப்பையில் ஆடுவது சந்தேகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்னாபிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. சொந்த ஊரிலேயே இந்த போட்டி நடப்பதால் இங்கிலாந்து அணி முழு பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி பந்து வீச்சாளர்  டேல் ஸ்டெயின் நடந்து முடிந்த 2 பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவில்லை. டேல் ஸ்டெயின் உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா ஆடும் இரண்டாம் போட்டியில் விளையாடுவார் என தென்னாபிரிக்கா அணி நிர்வாகம்  நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக டேல் ஸ்டெயின், IPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடிய டேல் ஸ்டெயின் காயம் காரணமாக சொந்த ஊர் சென்றுவிட்டார். ஏற்கனவே டேல் ஸ்டெயின் காயம் காரணமாகி பல மாதங்கள் தென்னாபிரிக்கா அணிக்கு விளையாடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.