தமிழகத்தில் குட்கா , கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துக்கள் முற்றிலுமாக ஒழிக்கபட பல நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் தொடர்ந்து எடுக்கபட்டு வருகிறது.
இளசுகளுக்கு அதை கை மாத்தி விடுறதுல அவள் கில்லாடி..! 23 வயதில் வியாசர்பாடியை கலக்கிய ரம்யா!
இது தொடர்பாக பல முறை காவல்துறையினர் சார்பில் சோதனை நடத்தபட்டுள்ளதும் , வழக்கு பதிவு செய்து வருவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், இளம் பெண் உட்பட மூவர் கஞ்சா விற்ப்பனைக்காக போலீசாரால் கைது செய்யபட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே இருவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விஜி (20), விக்னேஷ் (20) இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர், இதனை அடுத்து விசாரணையில், பிரபல ரவுடி வியாசர்பாடி அஜித் குமாரின் மனைவி ரம்யா (23) இதில் சம்மந்தபட்டுள்ளதாக தெரிந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாதவரம் - பால் பண்ணை பகுதியில் பதுங்கி இருந்த இளம் பெண் ரம்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரம்யா தான் கஞ்சா பொட்டலங்களை விற்க கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாசர்பாடி சுற்றுவட்டாரங்களில் இளசுகளை குறி வைத்து கஞ்சா பொட்டலம் கைமாற்றி விடுவதில் ரம்யா கில்லாடி என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.