என் உதவியாளர கூட்டிட்டு எங்கடி போன? துப்பாக்கி முனையில் திமுக EX எம்எல்ஏவின் 2வது மனைவிக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

அதிமுகவின் முக்கிய பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் கைதாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை திருவாரூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அசோகன். இவர் அதிமுக-வில் இணைந்தார். இவர் தன்னுடைய 2-வது மனைவியான ஹேமா என்பவருடன் பட்டினப்பாக்கத்தில் வசித்துவந்தார். 

அசோகனின் உதவியாளரை அழைத்து கொண்டு 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று அசோகனின் உதவியாளரை அழைத்து கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட் முதலிய நிவாரண பொருட்களை அளிப்பதற்காக சென்றார். அவற்றை அளித்து விட்டு வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் திரும்பியவுடன், அசோகனுக்கு ஹேமா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி போய் அசோகன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காண்பித்து ஹேமாவை கொன்றுவிட போவதாக மிரட்டியுள்ளார். உடனடியாக ஹேமா தன்னுடைய தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்த சம்பவம் குறித்து ஹேமா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அசோகன் ஜாமீன் வாங்கிக்கொண்டு சிறையிலிருந்து வெளிவந்தார்.  

இந்த வழக்கானது எம்பி எம்எல்ஏக்களுக்கு விசாரணை நடத்தப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையானது நேற்று முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். முன்னாள் எம்எல்ஏ அசோகனுக்கு கொலை முயற்சி செய்த பிரிவில் 3 ஆண்டுகளுக்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இன்று சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.