வருங்கால மனைவி நயன்தாராவின் முன்னாள் காதலன் சிம்புவுக்கு சொம்பு தூக்கும் விக்னேஷ் சிவன்!

நடிகர் சிம்பு திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து 35 வருடங்கள் ஆகின்றன.


1983 ம் ஆண்டு பிறந்த சிம்பு, சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். பிறந்த ஒரு வருடத்திலே 1984ம் ஆண்டே சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் இயக்கத்தில் உறவை காத்த கிளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் டி.ராஜேந்திரன் இயக்கத்திலே மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி என பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு , 2002 ம் ஆண்டு முதல் முறையாக ஹீரோவாக காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தார்.

தந்தை  டி.ராஜேந்திரன் இயக்கத்தில் மட்டும் நடித்து கொண்டிருந்த நடிகர் பின்னர் மற்ற பெரிய இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இன்று கோலிவுட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற மிக பெரிய ரசிகர் பட்டாளத்துடன் இருக்கிறார்.

இவர் திரை துறைக்கு வந்து 35 வருடங்கள் நிறைவு பெற்றதை பாராட்டும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவை வாழ்த்தி ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார். 

ரசிகர்களின்  அளவுகடந்த உண்மையான  அன்பை நீங்கள் சம்பாதித்ததே உங்களின் மிக பெரிய வலிமை என்று நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்ட்துள்ளார் . இதே போல எப்போதும்  நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனவும் அதில் அவர் கூறியுள்ளார்.