முன்னணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கடத்தபட்டு, 30 இலட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யபட்டுள்ளது.
மகளிர் மட்டும் பட பாணியில் சபலம்! கம்பெனி எம்டியை கடத்திய 4 பெண்கள்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வார இறுதி நாளை முடித்துவிட்டு டில்லிக்கு திரும்ப இருந்த 64 வயதான பிரபல கடல் சார் பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் , நட்சத்திர விடுதியில் இருந்து கடத்தி செல்லபட்டுள்ளார். அவரது அறையில் சம்பவத்தன்று 2 பெண்கள் சில நிமிடங்கள் பேசிகொண்டிருந்த பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி வெளியே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சில மணி நேரத்திற்க்குள்ளாக ,அவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க 30 இலட்சம் பணம் தேவை எனவும் மிரட்டி அந்த நிறுவனத்திற்கு போன் கால் செய்துள்ளனர்.இதனை அடுத்து அளிக்கபட்ட புகாரில் தான் நீண்ட போராட்டத்திற்க்கு பின்னர் போலீசார் ஒரு வீட்டில் அடைத்து வைக்கபட்டிருந்த இயக்குனரை மீட்டுள்ளனர்.
மேலும் இது குறித்த விசாரணையில் சம்மந்தபட்ட குற்றவாளிகள் குறுகிய காலத்தில் பணம் சம்மாதிக்கதான் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் கடத்தப்பட்ட நபரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சபல புத்தி உடையை தங்கள் எம்டியை கடத்தி பணம் பறிக்க அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது.