திடீர் நெஞ்சுவலி! மயங்கி சரிந்த பிரயன் லாரா! அதிர்ந்த மருத்துவர்கள்! என்ன ஆனது?

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான பிரைன் லாரா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.


1990 முதல் 2007ஆம் ஆண்டு வரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் பிரையன் லாரா. அதிரடி பேட்ஸ்மேன் ஆனா இவர் டெஸ்ட் போட்டியில் தனியாளாக நானூறு ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். 131 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியின் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் நிலையில் தனது பணி தொடர்பாக மும்பையில் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று லாராவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதை எடுத்து உடனடியாக அவரை குளோபல் மருத்துவமனைக்கு உடன் இருந்த அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அங்கு பிரையன் லாராவுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் பூரணமாக குணமடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்த பின்னர் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.