இதயத்தில் திடீர் அடைப்பு! உயிருக்கு போராடும் காமெடி நடிகர்!

திடீரென இதய அடைப்பு ஏற்பட்டு மும்பையில் அனுமதிக்கப்பட்டுள்ள ப்ரம்மானந்தமுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


62 வயதான பிரம்மானந்தம் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் கில்லி மொழி பயணம் உட்பட பல்வேறு படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவைகளால் ரசிகர்களை ஈர்த்த இவர்,

 

தற்போதும்அவர் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ள இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள ஆசிய இருதய மையத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

 இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ராமகந்தா பாண்டா அறுவை சிகிச்சை செய்துள்ளார். திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின் பிரம்மானந்தம் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரை அவரது மகன்களான ராஜகவுதம் மற்றும் சித்தார்த் ஆகியோர் கவனித்து வருகின்றனர். 

 

அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரம்மானந்த முக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தி கேட்டு தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவர் பூரண குணமடைந்து மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் என தெலுங்கு திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

 

கடைசியாக அவர் என்டிஆர் கதாநாயகடு என்ற வரலாற்றுப் படத்தில் நடித்திருந்தார். மேலும் லாட்டர் சேலஞ்ச் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்காற்றி வருகிறார்.