ஒரே நேரத்தில் பல ஆண் தயாரிப்பாளர்களிடம்!!! பிரபல பெண் தயாரிப்பாளர் அதிரடி கைது!

ஆண் தயாரிப்பாளர்களிடம் சுமார் 32 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பிரபல பெண் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிரிஅர்ஜ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர் பிரர்னா அரோரா. இவர் நடிகர் அக்சய் குமாரை வைத்து தொடர்ந்து திரைப்படங்கள் தயாரித்து வருபவர். ரஷ்தம், டாய்லட் ஏக் பிரேம் கதா ஆகிய படங்கள் அரோராவின் தயாரிப்புகள் ஆகும். மேலும் பரி, பேட்மேன் ஆகிய படங்களையும் அரோரா தயாரித்துள்ளார்.   இதுமட்டும் இன்றி படங்களை விலைக்கு வாங்கி பிறருக்கு விற்பனை செய்யும் பணியிலும் அரோரா ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பனே கான் எனும் படத்தை தனித்த உரிமை என்று கூறி பலருக்கு விற்பனை செய்துவிட்டதாக அரோரா மீது பிரபல தயாரிப்பாளர் வாசு பக்னானி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்களும் பனே கான் படத்தை தங்களுக்கும் அரோரா விற்பனை செய்துள்ளதாக புகார் அளித்தனர்.

   இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அரோ வீட்டில் பொருளாதார குற்றத்தடுப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அரோரா கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சோதனையின் போது அரோரா வீட்டில் ஏராளமான போலி ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரோரா பல்வேறு பெயர்களில் போலி பாஸ்போர்ட் பெற்று வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பான் கார்டுகளும் அரோரா பெயரில் நிறைய இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.   இதனை அடுத்து பெண் தயாரிப்பாளர் அரோரா மீது மேலும் பல வழக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.