கல்யானத்துக்கு முன்பே கர்ப்பம்! அம்பலமானது பிரபல நடிகையின் அந்தரங்க வாழ்க்கை!

பிரபல நடிகை கல்யானத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்த தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


2002ம் ஆண்டு இந்திய அழகியாக பட்டம் சூட்டப்பட்டவர் நேஹா தூபியா. அதன் பிறகு இந்தி, தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்து இவர் புகழ்பெற்றார். அண்மையில் நெட்பிலிக்ஸ் ஒரிஜினல் மூவியான லஸ்ட் ஸ்டோரியில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அதிலும் கல்லூரி விரிவுரையாளராக இருந்து கொண்டு சுய இன்பம் அனுபவிக்கும் கேரக்டரில் நேஹா தூபியா வெளுத்து வாங்கியிருப்பார்.
   தொடர்ந்து இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த நேஹா தூபியா தனது 38வது வயதில் திடீரென தன்னை விட 3 வயது இளையவரான தொழில் அதிபர் அங்கத் பேடியை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. பிரபல நடிகையாக இருந்தும் நேஹா அவசர அவசரமாக  திருமணம் செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

   அதே சமயம் நேஹா தூபியா காதலிக்கும் போதே அங்கத் பேடியுடன் வரம்பு மீறியதால் கர்ப்பமானதாகவும் இது வெளியே தெரிவதற்குள் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை நேஹா தூபியா குடும்பத்தினர் மறுத்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே நேஹா தூபியா கர்ப்பமாக இருந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.   மே 10ந் தேதி நேஹா – அங்கத் திருமணம் செய்து கொண்ட நிலையில், நவம்பர் 18ந் தேதி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் முடிந்து குறைந்தது பத்து மாதமாவது குழந்தை பிறக்க நாள் ஆகும் நிலையில் ஆறே மாதத்தில் நேஹா குழந்தையை பெற்று இருப்பது திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தி திரையுலகில் குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்த நிகழ்வுகள் எல்லாம் இருப்பதை தற்போது பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.