விவாகரத்து எப்போது? நிச்சயதார்த்தத்தின் போதே விபரீத கேள்விக்கு பதில் அளித்த பிரபல நடிகை!

திருவனந்தபுரம்: நிச்சயதார்த்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட நடிகையை விவாகரத்து எப்போ எனக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியூட்டி உள்ளனர்.


கேரளாவைச் சேர்ந்தவர் மீரா அனில். பிரபல டிவி சீரியல் நடிகையான இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் விஷ்ணு என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், இது பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறிய மீரா அனில், திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டார். விஷ்ணுவும், அவரும் நீண்ட நாளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் அவர்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் பலரும், எப்போ விவாகரத்து, அடுத்த திருமணம் எப்போ? என்றெல்லாம் கேள்வி கேட்டு தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளனர். இதுபோன்ற கேள்விகள் மனதிற்கு வேதனை அளிப்பதாக, மீரா குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக திருமணம் செய்ய உள்ள நிலையில், நடிகையை ஒரு பொம்மை போல நினைத்து தவறான கேள்விகளை கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ரசிகர்களை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது. மீராவின் திருமணம் ஜூன் 5ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.