பிரபல நடிகர் - இயக்குனர் ராபர்ட் ராஜசேகர் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி குணசித்திர நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணனின் முதல் கணவர் காலமாகியுள்ளார்.


ராபர்ட் ராஜசேகர் என்று அனைவராலும் அறியப்பட்டவர் ராஜசேகர். ராபர்ட் - ராஜசேகர் எனும் இரட்டையர்கள் இயக்கிய மனசுக்குள் மத்தாப்பூ, பாலைவனச் சோலை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. இவற்றில் மனசுக்குள் மத்தாப்பூ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சரண்யா. 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சரண்யா - இயக்குனர் ராஜசேகர் இடையே காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண பந்தம் நீடிக்கவில்லை. இதனால் ராஜசேகர் - சரண்யா தம்பதி விவாகரத்து பெற்றது. இதன் பிறகு சரண்யா நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார்.

ராஜசேகர் தாரா எனும் பெண்ணை திருமணம் செய்தார். சரண்யா முன்னணி நடிகையாக வெள்ளித்திரையில் வலம் வரும் நிலையில் ராஜசேகர் சின்னத்திரையில் முன்னிலையில் இருந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவின் அப்பா, தாத்தா வேடங்களில் இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜசேகர் இன்று காலமானார்.

இந்த தகவல் ராஜசேகரின் முதல் மனைவி சரண்யாவிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ராஜசேகர் உடலை பார்க்க சரண்யா செல்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பொன்வண்ணனை திருமணம் செய்து குழந்தைகளுடன் வசித்து வரும் அவர் கடந்த காலங்களை மறந்திருந்த நிலையில் முதல் கணவர் மரணம் மூலம் மீண்டும் அந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்துள்ளார்.

செய்தியை வீடியோவாக பார்க்க