ஒரு குடும்பத்தின் தாய் - தந்தை - மகன் என 3 பேருக்கும் கேன்சர் நோய்! சிகிச்சைக்காக 3 பேரும் எடுத்த விபரீத முடிவு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஃபுளோரிடா: புற்றுநோய் பாதித்த நிலையில், அதற்கான மருந்து செலவை சமாளிப்பதற்காக, தங்களது ஓட்டலை ஒரு குடும்பத்தினர் விற்றுள்ளனர்.


அமெரிக்காவின் ஃபுளோரிடா பகுதியை சேர்ந்தவர் கேதி டிஸ்கிளெப்ஸ். இவரது கணவர் பினாய்ட். இவர்களுக்கு, 17 வயதில்  லுக் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், கேதிக்கு ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு காரணமாக, புற்றுநோய் ஏற்பட்டு, அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இதேபோல, அவரது கணவருக்கு, மூளையில் புற்றுநோய் ஏற்பட்டது. இதுதவிர, அவர்களது மகன் லுக், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இப்படி ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புற்றுநோய் வந்ததால், கேதியின் குடும்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மருந்து மற்றும் சிகிச்சை செலவு மிக அதிகமாக இருந்ததால், அவர்கள் வேறு வழியின்றி தங்களுக்குச் சொந்தமாக இருந்த ஃபிரெஞ்ச் அமெரிக்கன் ரெஸ்டாரண்டை விற்பனை செய்ய தீர்மானித்தனர்.

16 ஆண்டுகளாக நடத்தி வந்த ஓட்டலை திடீரென விற்றது மன உளைச்சலாக இருந்தாலும், தங்களின் உயிர் முக்கியம் என்பதால் இதனை செய்ததாக, கேதி குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.  

தற்போதைய நிலையில், கேதி மற்றும் அவரது மகன் லுக் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறியுள்ளனர். கேதியின் கணவர் பினாய்ட் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.